டெங்கு காய்ச்சலின் ஆரம்ப அறிகுறிகள் என்னென்ன?
தமிழகத்தில் ஆங்காங்கே டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கி உள்ளது. இதில் டெங்கு காய்ச்சல் என்பது டெங்கு வைரஸால் பாதிக்கப்பட்ட "பெண் ஏடிஸ் எஜிப்டி" கொசுக்கள் மனிதர்களை கடிப்பதன் மூலமாக காய்ச்சல் ஏற்படுத்துவது.
இதில் பெண் ஏடிஸ் எஜிப்டி கொசுக்கள் மூலமாக தான் மனிதர்களுக்கு டெங்கு வைரஸ் பரவுகிறது.
ஏற்கனவே டெங்கு வைரஸால் பாதிக்கப்பட்ட மனிதர்களின் இரத்தத்தை குடிப்பதன் மூலமாக ஏடிஸ் எஜிப்டி கொசுக்களுக்கு டெங்கு வைரஸ் பெறலாம். மேலும் டெங்கு வைரஸால் பாதிக்கப்பட்ட பெண் ஏடிஸ் எஜிப்டி கொசுக்கள் மூலமாக தான் டெங்கு வைரஸ் பரவுகிறது.
டெங்கு வைரஸால் பாதிக்கப்பட்ட ஏடிஸ் எஜிப்டி கொசுக்கள் ஆரோக்கியமாக உள்ள மனிதர்களுக்கு கடிப்பதன் மூலம் வைரஸ் தொற்றைப் பரப்புகிறது. மேலும் இப்படி தான் ஒருவர் இடமிருந்து மற்றொரு நபருக்கு டெங்கு வைரஸை பரவச் செய்கிறது. இதில் டெங்கு காய்ச்சலால் குழந்தைகள், வயதானவர்கள் என அனைவரையும் பாதிக்கிறது.
பொதுவாகவே ஆண் கொசுக்கள் டெங்கு வைரஸை பரப்புவதில்லை. அதனால் மனிதர்களை கடிக்க வாய்ப்பு இல்லை. ஆனால் பெண் ஏடிஸ் எஜிப்டி கொசுக்கள் மனிதர்களின் இரத்தத்தை உறிஞ்சுகிறது. இதில் மனிதர்களிடம் இருந்து உறிஞ்சப்பட்ட இரத்தத்தை வைத்து தான் பெண் ஏடிஸ் கொசுக்கள் இனப் பெருக்கம் செய்கிறது. இந்த பெண் ஏடிஸ் எஜிப்டி கொசுக்கள் இனப் பெருக்கம் செய்ய மனிதர்களுடைய இரத்தம் தேவைப்படுகிறது.
ஏற்கனவே டெங்கு வைரஸால் பாதிக்கப்பட்ட ஏடிஸ் கொசுக்கள் மனிதர்களை கடித்த பின் உடலில் டெங்கு வைரஸை செலுத்துகிறது. இதனால் தான் மனிதர்களுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட காரணமாகிறது. முக்கியமாக பெண் ஏடிஸ் எஜிப்டி கொசுக்கள் அதிகமாக உள்ள இடத்தில் தான் டெங்கு காய்ச்சலும் அதிகமாக பரவுகிறது.
டெங்கு காய்ச்சல் ஆனது ஆரம்பத்தில் காய்ச்சல் அதன் பின் தலைவலி போன்ற அறிகுறிகள் தோன்றும். டெங்கு காய்ச்சலின் ஆரம்ப அறிகுறிகளான கடுமையான காய்ச்சல், கடுமையான தலைவலி, குமட்டல் மற்றும் வாந்தி, உடல் சோர்வு, குறைவாக சிறுநீர் வெளியேற்றம், வயிற்று வலி, கடுமையான மூட்டு மற்றும் தசையில் வலி, கண்களுக்குப் பின்புறத்தில் வலி, தோல் பகுதியில் அரிப்பு ஆகியவைகள் ஆகும்.
மேலும் இது போன்ற அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் அல்லது சந்தேகம் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியமாகும். ஏனென்றால் டெங்கு காய்ச்சலுக்கு என்று தனியாக மருந்துகள் இல்லை. அதனால் நோயின் தீவிரம் அடைந்தால் மரணம் நிகழலாம்.
இதில் முக்கியமாக ஒரு முறை டெங்கு காய்ச்சல் வந்தால் மீண்டும் டெங்கு காய்ச்சல் வர வாய்ப்புள்ளது. அதனால் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும்.
EMERGENCY SERVICE: 044 - 27528528 | 94990 59990
Toll-Free: 1800 599 0999
#dengue #AdhiparasakthiHospitals #adhiparasakthi #mosquito #denguesymptoms #DengueFever #aedes #denguefever #fever #denguevirus #aedesaegypti #tamilhealth #tamilhealthtips #healthtipstamil #medical #healthtipstamil
0 Comments
Top Comments of this video!! :3