Mix - Aanmeegam

14 videos • 33 views • by Sound Of NSK - Motivation Tamil, Spiritual ஆன்மிகம் அல்லது ஆன்மவியல் (spirituality) என்பது ஆன்மாவுடன் தொடர்புடைய விடயங்களைக் குறிக்கும். ஆன்மிகத்தினைப் பின்பற்றுதல் பயனுள்ள ஒரு செயற்பாடு ஆகும். இது, மத நம்பிக்கை, ஆழ்நிலை உண்மை என்பவற்றுக்கு நெருக்கமான ஒரு கருத்துரு ஆகும். ஆன்மிக விடயங்கள், மனிதத்தின் அனைத்தும் கடந்த இயல்பையும் நோக்கத்தையும் குறிப்பன. இது மனிதர்களைப் பொருள் சார்ந்த, உயிரியலோடு தொடர்புடைய ஒரு உயிரினமாக மட்டும் கருதாமல், பொருள்சார் உலகையும் காலத்தையும் கடந்ததாகக் கருதப்படும் ஒன்றோடு தொடர்புபட்டவையாகவும், ஐம்புலன்கள் கடந்ததாகவும் கருதுகின்றன. ஆன்மிகம் என்பது, உடல், ஆன்மா என்பவற்றுக்கு இடையிலான வேறுபாட்டைக் குறிக்கும் மனம்-உடல் இருமைத்தன்மையையும் உணர்த்துகிறது. இதனால், ஆன்மிகம் என்பது, பொருள் சார்ந்த உலகியல் விடயங்களுடன் முரண்பட்டதாகக் கருதப்படுகிறது. ஆனால் மனம் கடந்த பெருநிலையை உணர்த்துவது ஆன்மிகம் ஆகும்.