யானை வேட்டுவன் யானையும் பெறுமே
புறநானூறு - 214 நல்வினையே செய்வோம்
youtu.be/wbh-SI1hyPE
வேட்டுவர் அரசர்கள் தினம் தை 1
வேட்டுவர் என்றால் தலைவன்
வேட்டுவர் என்றால் பாதுகாவலன்
வேட்டுவர் என்றால் அரசன் என்று சங்க இலக்கியங்கள் நமக்குக் கூறுகிறது.
வேட்டுவர்கள் குறிஞ்சி நிலத்தின் அரசர்கள் என்று தொல்காப்பியம் கூறுகிறது.
குறிஞ்சி நிலம் தமிழகத்தில் கன்னியாகுமரி முதல் திருப்பதி வரை பரந்து விரிந்து உள்ளது. குறிஞ்சி நிலத்தின் பூர்வீக மக்களான வேட்டுவர்கள் இனக் குழுக்களாக வாழ்ந்து, வேளிராக வளர்ந்து, அரசர்களாக மாறி குறிஞ்சி நிலத்தை ஆண்டு வந்துள்ளார்கள். வேட்டுவர் அரசர்கள் ஆட்சிக்காலத்தில் மக்கள் மகிழ்ச்சியுடனும் பாதுகாப்புடனும் வாழ்ந்தனர் .வேட்டுவர் அரசர்கள் மொழி, வணிகம், விவசாயம் போன்ற துறைகளில் தனி கவனம் செலுத்தி தமிழர்களையும் தமிழ் மொழியையும் உலக அளவில் பெருமையடைய செய்தனர் . அத்தகைய பெருமை மிக்க குறிஞ்சிநில வேட்டுவ அரசர்கள் 40க்கும் மேற்பட்டோர் குறிஞ்சி நிலத்தை ஆட்சி செய்து உள்ளார்கள். வேட்டுவர் அரசர்கள் பெருமையை போற்றும் வகையில் நாம் இந்த வேட்டுவ அரசர் தினத்தை கொண்டாடுகிறோம்.