Hi All,
Support and follow this channel for different and easy Rangoli designs. We will upload Rangolis with step by step design and simple coloring patterns.
நம் இல்லத்துக்கு வருகை புரியும் விருந்தினர்களை இன்முகத்தோடு வரவேற்பது, நம் வீட்டு வாசலில் போடப்பட்டிருக்கும் அழகான கோலம்தான். எதிர்மறையான எண்ணங்களோடு நம் வீட்டிற்குள் நுழைபவர்களைக்கூட நேர்மறையாகச் சிந்திக்க வைக்கும் வல்லமை கோலங்களுக்கு உண்டு.
கோலம் பற்றி சில தகவல் :-
ஞாயிறு - சூரியக்கோலம், செந்தாமரைக் கோலம்
திங்கள் - அல்லிமலர்க் கோலம்
செவ்வாய் - வில்வ இலைக்கோலம்
புதன் - மாவிலைக் கோலம்
வியாழன் - துளசிமாடக் கோலம்
வெள்ளி மற்றும் பௌர்ணமி - தாமரைக் கோலம் (எட்டு இதழ்)
சனி - பவளமல்லிக் கோலம்.
அரிசிமாவினால் கோலமிடுவது சில உயிர்களுக்கு உணவாக இருப்பதால் அன்னதானம் செய்த பலன் கிடைக்கும்.
சுவரையொட்டி போடப்படும் பார்டர் கோலங்கள் தீய சக்திகளைத் தடுக்கும் வல்லமைகொண்டது.
அதனால் கோலமிடுவதை ஒரு வேலையாக நினைத்துச் செய்யாமல் ஒரு வழிபாடாக நினைத்து பயபக்தியோடு செய்ய வேண்டும்.
Let's put Rangoli to bring happiness and positivity around us.