அறிவோம்
குலதெய்வ வழிபாடு
கோடி தெய்வ வழிபாட்டிற்கு சமம்.
குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வமும் குலதெய்வம்தான்! குலதெய்வமே நமக்கு எளிதில்அருளைத் தந்தருளும். மேலும் மற்ற தெய்வவழிபாடுகளின் பலன்களும் வேண்டுமெனில், குலதெய்வ வழிபாடு முக்கியம்.
குலதெய்வம் என்பது நம் முன்னோர்களில் தெய்வமாக மாறி விட்ட புண்ணிய ஆத்மாக்கள் என்கிறார்கள் முன்னோர்கள். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினைச் சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவர்கள். எனவேதான், அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன.
நமது அறிவோம் சேனல் குலதெய்வங்களை மேன்மைப்படுத்தும் வகையில் அனைத்து பதிவுகளும் இடம்பெறும்.
உங்கள் குலதெய்வம் சார்ந்த திருவிழா, கோவில் வரலாறு, குலதெய்வ விளக்கம் மற்றும் சிறப்பம்சங்களை அறிவோம் இணைய தளத்தில் மூலம் உலகத்திற்கு எடுத்துரைக்க விரும்பினால் அணுகவும்.