இயற்கையை நேசி ! இயற்கையை ரசி !! இயற்கையை சுவாசி !!!
இயற்கையாக விளையும் பொருட்களை ஊக்கிவிப்போம் - இயற்கை விவசாயத்தை காப்போம் - நீர் நிலைகளை பாதுகாப்போம். அடுத்த தலைமுறைக்கு இயற்கை செல்வங்களை விட்டுசெல்வது நமது கடமை.
நஞ்சில்லா உணவு...
நோயில்லா வாழ்வு...
இயற்கை விவசாயமே தீர்வு...
"தவறான விவசாய முறைகளால் வளமான பூமியையும் பாலைவனமாக நாம் மாற்றிவிடுவோம். இயற்கை விவசாயத்திற்கு திரும்பி, நம் மண்ணை காக்காத வரையில் எதிர்காலம் கிடையாது".
டாக்டர் நம்மாழ்வார் மற்றும் பத்மஸ்ரீ சுபாஷ் பாலேக்கர் போன்ற பெரியோர்கள் இயற்கை விவசாயத்தின் அவசியத்தையும் அதன் நுட்பத்தையும் நமக்கு வழங்கியிருக்கிறார்கள். மேலும் பல முன்னோடி விவசாயிகளிடம் இயற்கை விவசாய நுட்பங்கள் பொதிந்துள்ளன, அதை ஆக்கப்பூர்மாக வெளிக்கொண்டு வருவதன் மூலம் விவசாயிகளிடம் இருந்து விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தை கொண்டு செல்லும் வகையில் இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளை திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.
தமிழகம் ஒரு இயற்கை விவசாய மாநிலமாக மாறும் வரை "இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளை" இப்பணிகளை உறுதியுடன் தொடந்து மேற்கொள்ளும்.