வாசக உறவுகளுக்கு,
அன்பான வணக்கங்கள்.
நான் உங்கள் தோழி லதாகணேஷ், எனது இயற்பெயர் ஸ்வர்ணலதா என் கணவரின் பெயர் கணேஷ் குமார், என் பெயரின் பின் பாதியையும் என்னவர் பெயரின் முன் பாதியையும் ஒன்றிணைத்து லதாகணேஷ் எனும் புனைப்பெயரில் கதை கவிதைகளை கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.
வரிவடிவம் பெற்ற என் கதைகளுக்கு ஒலி வடிவம் கொடுக்கும் முயற்சியில் இப்போது இறங்கி உள்ளேன். தொடர்ந்து ஆதரவு தரும் வாசகர்கள் எனது புது முயற்சிக்கும் ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் ஆடியோ நாவல் பயணத்தை இங்கு துவங்குகிறேன்.
கவிதைகள் கொண்ட கதை எழுதுவது எனது சிறப்பு. என் கதைகளில் காதலும் காதலை போற்றும் கவிதைகளும் நிறைந்து இருக்கும்.
ஒவ்வொரு எழுத்தாளர்களுக்கும் வாசகர்கள் தரும் விமர்சனம் தான் ஊக்க மருந்து, நிறைகளை மட்டுமல்ல குறைகளையும் தயங்காமல் சுட்டிக் காட்டுங்கள் என் தவறுகளை திருத்திக் கொள்ள தயாராக உள்ளேன்.
என்றும் நட்புடன்
லதாகணேஷ்..
tamil audio novels
tamil novels audiobooks
latha ganesh audio novels