வாசக ஆசான்களே,
சாகாவனத்துக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன். இந்த தளம் எனது எழுத்துக்களை வெளிப்படுத்த முதலில் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் பொழுதுபோக்கு அம்சங்களுக்காகவும், நல்ல தகவல் தரும் தளமாகவும் மாற்றப்பட்டுள்ளது. மேலும் நம்மை சுற்றி வாழும் சில பூச்சியினங்கள் என்னை பெரிதும் ஈர்த்ததால், அவைகளை அறியும் ஆவல் என்னுள் ஏற்பட்டது. இதனை புகைப்படங்களாகவும், காணொளியாகவும் வடிவமைத்துள்ளேன். தொடர்ந்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
எதையாகிலும் எழுத பழகுங்கள்...
மனதில் எழும் எண்ணங்களுக்கு
வண்ணம் கொடுங்கள்...
வரிகள் உயிர் பெறட்டும்...
வாக்கியங்கள் உலா வரட்டும்...
எழுதுவதற்கு ஏன் அஞ்சுகிறீர்கள்?
கருத்துகள் உனதாகயிருப்பின் தயக்கம் கொள்வது ஏனோ?
வரிகளை வரிசைப்படுத்த உன்னிடம் வரியை யார் சுமத்துவார்கள்?
விழித்தெழு தோழா / தோழி இன்று...
எழுத்தாற்றல் எதிர்காலம் கரம் நீட்டி உன்னை அழைக்கும்!