டிஜிட்ஆல் (DIGIT-ALL) அமைப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் புதிய மாற்றங்களையும் பயன்களையும் தொழில்வணிக வளர்ச்சிக்கும் தனிமனித மேம்பாட்டிற்கும் வழங்கும் நோக்கில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தால் நிறுவப்பட்டு, முன்னால் குடியரசு தலைவர் மேதகு டாக்டர் APJ அப்துல்கலாம் அவர்களால் 18-07-2015 அன்று துவக்கப்பெற்று நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது நிலவிவரும் மாற்றத்தில் இனி டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் தேவையும் பயனும் பன்மடங்கு உயரப்போகிறது, இதை தொழில் முனைவோர்கள் தமக்கு சாதகமாக்க டிஜிட்டல் அம்சங்களை கற்றறிந்து நிறுவன செயல்பாடுகளை டிஜிட்டல் மயமாக்குவது காலத்தின் கட்டாயம், இதன் பயனால் மனிதவளத்தை கூட்டாமல், செலவுகளை குறைத்து, விற்பனையையும், லாபத்தையும் பெருக்கலாம். உடனே டிஜிட்ஆல் அமைப்பில் உறுப்பினராகி பயன் பெறுவீர்.