இங்கர்சால் (Ingersol) நார்வேவைச் சார்ந்த இயந்திரப் பொறியாளர், சமூக ஆர்வலர், எழுத்தாளர். 1980இல் நாகப்பட்டினத்தில் உள்ள மயிலாடுதுறையில் பிறந்தார். பொருளாதார இட ஒதுக்கீடு சரியா தவறா என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இயல் இசை நாடகம் என்ற தமிழர்களின் அடையாளத்தை மீட்டுருவாக்கம் முயற்சியில் முதல் கட்டமாக இசைவடிவம் கொடுக்கப்படாத 10 திருப்புகழ் பாடல்களை இப்போது இசையமைத்து வெளியிட உள்ளார். இதைப்போலவே திருவருட்பா நாலாயிர திவ்ய பிரபந்தம் சித்தர்கள் பாடல்கள் புறநானூறு கலிங்கத்துப்பரணி போன்ற அனைத்தையும் இசை வடிவில் கொண்டுவர வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அந்த இசை வடிவம் பழைய இசைவடிவில் மட்டுமல்லாமல் நவீன இசை வடிவான சொல்லிசை அதிரிசை போன்ற வடிவங்களில் வெளிவரும் என்று உறுதியளிக்கிறார். டிஜிட்டல் உலகில் தமிழை முழுமையாகக் கொண்டு வர வேண்டும் என்பதை இலக்காக வைத்து செயல்பட்டு வருகிறார்.
t.me/ingerol